பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உவமைகள் "இருண்டவீட்டில் மிகுதியாக உள்ளன. பிற பாடல்களில் இவை காணப்படவில்லை. முற்றிலும் மூடத் தனத்தில் வாழும் குடும்பத்தைச் சீர்திருத்த வேண்டி எள்ளல் நடையில் கவிஞர் இவ்வுவமைகளைக் கையாண் டுள்ளார் எனலாம். கவிதை என்பது கலையழகு நிறைந்தது. அக்கலை யழைகைத் தருவதில் உவமைகள் ஒப்பிலா இடத்தினை வகிக்கின்றன. அழகுணர்வோடு அவை அமைகின்றன. படித்தவுடன் நெஞ்சில் நிலைத்திடும் இவ்வுவமைகள் அழகுக் காட்சிகளாய்க் கருதத்தக்கவை. பூவிலிருந்து பெடையன்னம் ஒன்று புறப்படல் போல் பாவை இறங்கினள் வண்டிவிட்டே.121 நகைமுத்து வண்டியிலிருந்து இறங்கும் காட்சியை அழகாகச் சித்திரித்துள்ளார். குழந்தைகளை வருணிக்கையில், கோட்டைப்பவுன் உருக்கிச் செய்த குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள்' என விளக்கோடு உவமிக்கிறார் கவிஞர். கோட்டைப். பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்கு என்றவுடன் நம்முன்னே விளக்கும், விளக்கின் ஒளியும் நினைவுக்கு வருகின்றன: குழந்தை தவழ்ந்து வரும் காட்சியும் கண்ணில் நிறைகின்றது. தலைவன், தலைவி இருவரும் ஒருவரை யொருவர் சந்திக்கின்றனர். இருவர் பார்வையும் ஒன்றாய்க் கலக்கின்றன; அவர்கள் வேறு எதனையும் நோக்காமல் ஒருவரையொருவர் நோக்கியிருந்தனர். கொடுத்ததை வாங்காக் கொடையாளர் போல் விடுத்த விழியை மீட்கா திருந்தான்123 என்று தலைவனின் பார்வை கொடையாள னின் செயலோடு ஒப்பிடப்படுகிறது.