பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உள்ளடக்கி நிற்கிறது. பாவேந்தரின் மரபுநெறியைப் போற்றும் பாங்கிற்கு இவற்றைக் காட்டாகக் கொள்ளலாம். ஆழ்ந்த அனுபவ உணர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு உதவிபுரியும் வகையில் உவமைகளை அடுக்கிச் சொல்வது படைப்பாளர்கள் கையாளக்கூடிய உத்தியாகும். இவ்வாறு ஒரு பொருள் குறித்து அடுக்கிக் கூறப்படும் உவமைகளை அடுக்கு உவமைகள் எனலாம். பாவேந்தரின் கவிதை களில் இரண்டு முதல் ஐந்து வரையிலான உவமைகளைக் காண முடிகிறது. உரிமையைஎதிர் நோக்குவோர் போன்றும், வெள்ளம் கண்ட உழவர் போலவும் குடும்பவிளக்கின் தலைவி தனது குழந்தைகளை ஆவலுடன் வரவேற்றாள். இழந்த நல்லுரிமை தன்னை எய்தியே மகிழ்வதைப் போல்! வழிந்தோடும் புது வெள்ளத்தை வரவேற்கும் உழவரைப் போல் எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்தினாள் இருகையாலும். ' இப்பாடற் பகுதி இரு உவமைகளை ஒரு பொருளுக்கு உரைக்கின்றது. தலைவியின் திறம் நில அடிப்படையில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. அவளது நலம் மூன்று உவமை களால் வெளிப்படுத்தப்படுகின்றது. குறிஞ்சி நிலம் போல் நலத்தாள் வெறிமுல்லை போல் அழகாள் முறிமருதம் போல் வளத்தாள் ஆம் ஆம் ஆம் 37 என்பது ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த உவமையாம். காதலனிடம் தனக்குள்ள அன்பின் நெருக்கத்தை மூன்று உவமைகளின் மூலம் கூறுகின்றாள் காதலி, திங்களிடம் குளிர்போலும் கதிரவன்பால் செந்தழல் போலும் பூவில் மணமே போலும் உங்களிடம் எனக்குள்ள அன்பின் மீதில்: