பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் வி. பாலசுப்பிரமணியன் 171 உங்களை விட்டுப் பிரியாத குளிர்ச்சி, கதிரவனை விட்டு அ_லாத வெம்மை, பூவிடத்துக் குடி கொண்ட மணம் ஆகியன போன்று நான் உங்களிடத்தே கொண்டுள்ள உறவு என்பது காதலியின் கூற்றாகும். காதலர் இருவர் தமக்குள் ஒருமித்த உணர்வுடையோ பாய்த் திகழும் முறையை நான்கு உவமைகள் மூலம் வாட் டுகிறார் கவிஞர். நாமிருவர் பூப்போல் மணம் போல் இருள்மாற்றும் இன்ப நிலாப் போல் குளிர்போல் ஒருமித்தல் வேண்டும் 9 _பதில் பூ, பூவின் மணம், நிலா, நிலவின் தண்மை ஆகியன உவமையாகக் கூறப்பட்டுள்ள பாங்கு நோக்கத் _து. அடுத்து, தலைவியின் எழிலைத் தலைவன் முருவண் பாடுகின்றான். அவளது உடலழகை ஐந்து _வமைகளால் சுட்டுகின்றான். ஒவ்வோர் உறுப்பிற்கும் டிா உவமை சுட்டப்படுகிறது. - தேனைப் போல் மொழியுடையாள்: அன்றலர்ந்த செந்தாமரை போல் முகத்தாள் கெண்டை மீனைப் போல் விழியுடையாள் விட்டதிர்ந்த மின்னைப்போல் நுண்ணிடையாள்! கொண்ட வானைப் போல் உயர்வ்ாழ்வு வாய்ந்தாள் 140 ாங் காதலியின் உறுப்பழகை விளக்கும் பகுதியில் பயின்பம் சிறந்து நிற்கிறது. பாவேந்தரின் கவிதை பல் அடுக்குவமைகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. பவாறு ஒரு பொருள் மேல் இரண்டு, மூன்று என _மகளை அடுக்கிச் சொல்வதால் அப்பொருளின் பிறப்பு, மேன்மை ஆகியன வெளிப்படுகின்றன. மேலும் _பழகும், இலக்கிய நுகர்வுணர்ச்சியும் மேலோங்கு பிங் யா, பாவேந்தர் பயன்படுத்தியுள்ள உவமைகள்