பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கருத்து விளக்கம், கலைநயம், மரபுப்பிடிப்பு, ஆகியவற்றில் அவருக்கிருந்த திறத்தை வெளிப்படுத்துகின்றன. உருவகம் இலக்கிய வனப்பில் உவமையைவிட உருவகமே ஆற்றலும் அருமையும் உடையதாகும். இத்தகு உருவகத் தைப் பற்றிக் கூறும்போது 'பொருளையும் உவமையையும் தனித்தனியே காணாமல் ஒன்றிலேயே மற்றொன்றைக் காண்பது உருவகம் ஆகும். எனவே அடக்கிச் செறிந்த உவமையே உருவகம் என்று கூறப்படும். பாட்டின் உயிர் கோட்பாடாகவும், கவிஞனின் தலையாய தேர்ச்சியாகவும் சிறப்பாகவும் உருவகம் போற்றப்படுகிறது. உவமையைப் போது அதனுாடே உருவகத்தையும் அடக்கிச் சொல்வது அரிய ஒரு செயலாகும். இத்தகு அழகு உருவகங்களைப் பாவேந்தர் பல நிலை களில் கண்டுள்ளார். எனினும் இங்கு (1) ஒரு பொருளுக்கு ஒரு பொருள் உருவகம். (2) பலபொருளுக்குப் பலபொருள் உருவகம் எனும் இரண்டு நிலைகளைக் காணலாம். ஒரு பொருளுக்கு ஓர் உருவகம் ஒரு பொருளுக்கு ஒரு பொருளே உருவகமாக அமைவதைத் தனிநிலை உருவகம் என்று குறிப்பர் ரா. சீனிவாசன். இவ்வாறு வரும் உருவகத்தைக் காண்போம். ஆடற் கலைக் கழகு தேடப் பிறந்தவள் ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்' இதில் ஆடவந்தவளை பொற்பாவை’ என்றும், புரட்சிக் கவியில் நிலாவைக் குறிக்கும்போது இருட்காட்டை அழித்த நிலா என்றும் இருட்டை க் காடு' என்றும்,