பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நீலம் போல் பூத்திருக்கும் பிறை போன்ற நெற்றி வாய்ந்தாள் பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள். "' இதில் அவளின் சாயலுக்கு மயிலும், முகத்துக்கு நிறை மதியும், கண்ணுக்கு நீலமும், நெற்றிக்குப் பிறைமதியும் பேச்சுக்கு அமுதமும் உருவகிக்கப்பட்டுள்ளன. மங்கா உடலெனும் மாற்றுயர் பெண்ணையும் பொங்கும் சிரிப்புப் புத்தொளி முகத்தையும் வகைபெறு கழுத்து வலம்புரிச் சங்கையும் விழிமீ லத்தையும் மொழி.அ முதத்தையும் இதழ்ப்பவ ளத்தையும் இந்தா என்றே எதிரில் வைத்தே எழிலுறு கிள்ளைதன் அன்பெனும் நீர்வார்த் தளித்து நின்றாள். "' இதில் உடலுக்குப் பொன்னும், முகத்துக்கு ஒளியும், கழுத்துக்கு வலம்புரிச்சங்கும், விழிக்கு நீலமும், மொழிக்கு அமுதமும், இதழுக்குப் பவளமும், பெண்ணுக்குக் கிள்ளையும், அன்புக்கு நீரும் என்று பலவற்றுக்குப் பல பொருள் உருவகிக்கப்பட்டுள்ளன, இதுபோன்று மணி கோத்தாற் போல் உருவகம் அமைவது அரிது. சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச் சிரிப்புக்கும், கருப்பஞ்சாற்றுச் சொல்லுக்கும் குவிக்கின்ற காதலொளி விழிக்கும், கால் போல் கூந்தலுக்கும், முகத்தி ங்களுக்கும், உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே உயிர் நீயே என்றுணர்ந்தேன், இயங்கலானேன் அவிந்தனையே திருவிளக்கே! இந்த வையம் அவியவில்லை எனில் எனக்கிங்கென்ன வேலை.*** இதில் வாய்க்குச் சிவப்பாம்பலும், சிரிப்புக்கு முல்லையும், சொல்லுக்குக் கருப்பஞ்சாரும் விழிக்கு,ஒளியும், கூந்தலுக்குக் காரும், முகத்திற்குத் திங்களும், அவளுக்குத் திருவிளக்கும்