பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 175 என்று பல பொருளுக்குப் பல உருவகிக்கப்பட்டன. எனினும் இதில் காதலி என்று வெளிப்படுத்தி உருவகிக் காமல் திருவிளக்கே என்று உருவகத்திற்கு உருவகம் அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பாகும். வாங்கி நிற்கும் ஒளியைப் பார்! காட்சித்தேனில் வண்டடி நாம் என்றுரைத்து மகிழ்ந்து கின்றான். * இதில் ஒளிக்காட்சி தேனுக்கும், காண்கின்ற பெண்களுக்கு வண்டும் என்று பலவற்றுக்குப் பல உருவகிக்கப்பட்டுள்ளன. பறந்து வந்த கிளியே திறந்த என்மனக் கூடு புகுவாய் பிறந்த பெண்கள் பலகோடி - உன்போல் பெண்ணொருத்தி ஏது - நான் இறந்து போகுமுன் னாடி - மிக எழில் சுமந்தபடி என்னை நாடிப் பரந்து’** இதில் காதலியைக் கிளியாகவும், தன் மனத்தைக் கிளி உறையும் கூடாகவும் உருவகித்துக் காதலியின் உயிர் மூச்சை உலவ விடுகிறார். நெஞ்சுதீ! ஆனால் அன்னாள் முகம் மட்டும் கிலவே அன்றோ?-- இதில் இயலாக் காதலைக் காட்டும் கவிஞர் ஒப்பாத அவர் நெஞ்சத்துக்குத் தீயையும், நெஞ்சம் கடுத்தாலும் கடு கடுக்கா முகத்திற்கு நிலவையும் உருவகித்துள்ளார். பாவேந்தர் விளக்கும் உருவகங்கள் யாவும் மகளிரின் விழி, நெற்றி, பல், இதழ், இடை, நடை முதலியவற்றையே பெரும்பாலும் காதல் உணர்வோடு உருவகித்துள்ளார். இது, கவிஞர் புரட்சிப் பார்வை உடையவர் என்ற போதிலும் தமிழ் மரபை ஏற்பவர் என்பதைப் புலப்படுத்து கிறது. இவ்வாறு அமைகின்ற உருவகங்கள் கவியைக்