பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கற்பவர்கள் கா ல த் ைத ப் பொருட்படுத்தாமையை ஏற்படுத்தும் ஆற்றல் பெறுகிறது. வருணனை கவிதைகளில் பயின்றுவரும் உறுப்புகளுள் ஒன்று வருணனை. கவிஞனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே யுள்ள மதிநுட்ப வேறுபாட்டை அறிய உதவும் அளவு கோலாகக் கவிதையுலகில் இது கருதப்படுகிறது. கண்ணால் காணும் காட்சியை அதன் இயல் சற்றும் திரிபுபடாமல் சொற்றிறம் மேம்பட அழகுணர்வுடன் வெளிப்படுத்தும் போது அது வருணனை என்னும் பெயரைப் பெறுகிறது. இவ்வருணனை மரபைத் தழுவியும், மரபை மீறியும், புதுமை நோக்கிலும் அமையலாம். பொதுவாகப் பாவேந் தரின் பாடல்களில் மரபு தழுவிய வருணனையே காட்சி யளிக்கின்றது. அவ்வருணனைகளும் .ெ ப ன் க ைள வருணிக்கும்-காதல் தொடர்பான வருணனைகளாக உள்ளன. பூரீமதி இவளார்: உலகிடை மானிடமதிலேதிவள்? ஒரு சேலிணையினை நேரிருவிழி கோக்கை விநோத அதரம் மாமதி நிகர் ஓரிளமுகம் வானுறு மழைதானிருள்குழல் வாழ் மதுகரம் ஊதிடு சூடிய முடியொடு' எனும் இப்பாடலடிகளில் தன் தலைவியைக் கண்ணுற்ற தலைவன் அவளது கண், முடி, முகம் முதலானவற்றை நயம்பட வருணித்துள்ள திறம் தென்படுகிறது. இதனுள் வடசொல் சில பயிலக் காண்கிறோம். ஆனால் பெரும் பாலான பாடல்களில் துய தமிழ்ச் சொற்களே நிறைந் துள்ளன. பாவேந்தரின் தொடக்க காலக் கவிதையாக இஃது இருக்கக்கூடும் என நம்பலாம். தாமரை பூத்த குளத்தினிலே-முகத் தாமரை தோன்ற முழுகிடுவாள்!-அந்தக் கோமளவல்லியைக் கண்டுவிட்டான்-குப்பன்