பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 177 கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை-அவள் தூய்மை படைத்த உடம்பினையும்-பசுங் தோகை நிகர்த்த நடையினையும்-கண்டு காமனைக் கொல்லும் கினைப்புடனே-குப்பன் காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.' இதில் தாமரைக் குளத்திற்குக் குளிக்க வந்தவளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தவன் மீண்டும் ஒருநாள் தன் காதல் நினைவுகளைப் பரிமாறிக்கொள்ள அவளது வரவிற் காக விழிதொடுத்து மாந்தோப்பில் காத்திருந்தான் என்று காதல் மரபினை வருணித்துக் காட்டியுள்ளார் கவிஞர். புரட்சிக்கவியில் மன்னனின் எண்ணப்படி மங்கையும் மாகவிஞனும் பிரித்து வைக்கப்படுகின்றனர். ஒருநாள் கவிஞன் நிலவைப்பாட, அமுதவல்லி வியந்து திரையை விலக்கி உதாரனை நோக்கினாள். இருவர் நோக்கும் கலந்தன. கவிஞனுக்குத் தன் எதிரே நிற்பது பெண் தானா? என்ற ஐயம் எழுகிறது. மின் ஒன்று பெண்ணென்று புவியில் வந்து விளைந்தது போல் விளைந்த உனதழகுமேனி என்று இல்லாத ஒன்றை வருணனையாக்கியுள்ள திறம் போற்றுதற்குரியது. இவ்வருணனை அளிக்கும் இலக்கிய நயம் நெஞ்சை மகிழ் விக்கிறது. குறத்தியர்கள் கவண் எறியும் காட்சியைக் கானும் கவிஞர் அவர்களின் உடலுறுப்புகளைக் கூறும்போது, குறத்தியர் கவண் எடுத்துக் குறிபார்க்கும் விழி நீலப்பூ எறியும் கை செங்காந்தட்பூ உடுக்கைதான் எழில் இடுப்பே' என உருவக நயம் மிளிர வருணித்து உரைக்கின்றார்.