பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வளர்ந்த தேசபக்தியிலும் தெய்வ பக்தியிலும் தோய்ந்தார். அவற்றின் இதய ஒலிகளாகப் பாடல்களை இயற்றினார். பின்னால் மகாகவியாக வளர்ந்த நிலையில் காலத்தின் தேவையால் புதுமைகளைப் படைத்து அளித்தார். பாவேந்தரிடம் இருந்த இறை பக்தியின் வெளிப்பாடே அவரது புரீமயிலம் சுப்பிரமணியர் துதியமுது'. இந்நூல் 1926-ல் எழுதப்பட்டது. இந்நூலில் உள்ள கீர்த்தனங்கள்' கீர்த்தனாசிரியர்கட்கும் வழிகாட்டும் சிறப்புடையன. கவிஞரின் சிந்து பாடும் திறனுக்கு இஃதோர் அருமையான சான்று. பாவேந்தரின், சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்", ‘தொண்டர் நடைப்பாட்டு', கதர் இராட்டினப் பாட்டு’ ஆகிய சிறுசிறு நூல்கள் அவரது தேசபக்தியின் கனிகள். இவை எழுந்த காலம் 1930. கைகளில் கதர் துாக்கித் தெருத் தெருவாக விற்ற காலம் இது பாவேந்தரின் கதர்ப்பாட்டுகளைப் போல இதுவரை யாரும் பாடிய தில்லை. பாரதிதாசனின் தேசிய, தெய்வப்பாடல்கள் புதுவை, தமிழக ஏடுகளில் வெளிவந்தன. அவர், கே.எஸ்.ஆர்’, கண்டெழுதுவோன்", * கிறுக்கன்", * கிண்டல்காரன் , கே.எஸ். பாரதிதாசன்" என எழுதிக் குவித்துக் கொண் டிருந்தார். கருத்துகள் நிறைந்து கவிதை பொங்கும் உள்ளம் கொண்ட பாவேந்தரின் பேனா இறுதிவரை இயங்கிக் கொண்டே இருந்தது. சுயமரியாதைப் பாதையில் தேசபக்தியும், தெய்வபக்தியும் நிரம்பிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த பாவேந்தர் வாழ்க்கையில் 1928-ம் ஆண்டில் திருப்புமுனை ஏற்பட்டது. பாரத நாட்டில் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த கவிஞர்