பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தண்ணிலவும் அவள் முகமோ! தாரகைகள் நகையோ தளிருடலைத் தொடும் உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும் விண்ணிலம் கார் குழலோ? காணும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க் கள்வெறியோ? அல்லி மலர்த்தேனின் வண்டின் ஒலி அன்னவளின் தண்டமிழ்த் தாய்மொழியோ? வாழிய இங்கிவை எல்லாம் எழுதவரும் கவிதை கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள் கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே.'" இதில் தலைவியின் நலம் ஐயமாகவும் வியப்பாகவும் சுட்டப் படுகிறது. இறுதியில் அவள் எழுத முடியாத கவிதை என்று உருவகித்துச் சுட்டப்படுகிறாள். இதனை நோக்கு கையில்,

  • கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெரு வாழ்வோ என்னும் சேக்கிழாரின் செய்யுள் திறம் ஈண்டு நினைவிற்கு வரக் காணலாம்.

யாழின் மொழியும் இசைவண்டு நேர்விழியும் கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும் வாய்த்த கல்வஞ்சி' என்பதில் உவமையும், உருவகமும் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - எதிர்பாராத முத்தத்தில் பொய்கையில் நீராடும் மகளிரை, . . . * * * * * * * * * * * * * * * * * * * * * பொய்கை தன்னில் வெள்ள நீர் தளும்ப வெள்ள மேலெல்லாம் முகங்கள் கண்கள் எள்ளுப்பூ நாசி கைகள் எழிலொடு மிதக்கப் பெண்கள் தெள்ளு நீராடு கின்றார் சிரிக்கின்றார்! கூவுகின்றார்!