பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 179: என்று அவர்களது முகம், கண்கள், மூக்கு, கைகள் முதலியன வருணிக்கப்படுகின்றன. இஃது இயற்கை. வருணனையாக உள்ளது. திராவிட நாட்டுப் பண்ணில், நாட்டின் பெருமிதத் திற்குக் காரணமாகும் குன்றுகள், கடல்கள், நன்செய். நிலங்கள் முதலியவற்றை, அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக் குவியும் கடல்கள் முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய் முல்லைக் காடு மணக்கும் நாடு’** என்று கோவைப்படுத்திக் காட்டுகிறார். குறிஞ்சித்திட்டில் கடலோர மலைக்கோயிலைக் குறித்து அவ்விடத்தை வருணிக்கும்போது, முப்புறத்தும் தலைகூடிக் கீழ்ப்புறத்தில் ஆழத்துக் கடல்வெள்ளம் முழக்கம் செய்யக் கப்புகின்ற முயற்கூட்டம் தவழும் உச்சிக் கடலோர மலைக்கோயில்' " என்று முகிற்கூட்டம் தவழும் உச்சியை உடையதாக இலக்கியச் சுவை பெருகக் குறிப்பிடுகின்றார். தவழ்ந்து விளையாடும் மழலைச் செல்வம் ஆண் டொன்றை அடைந்திட்டபோது அதன் எ பூழி ைல, வளர்ச்சியைக் கவிஞர் வருணிக்கும் பாங்கில் உள்ள நிறைவும், பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. வான் பார்த்துக் கிடந்த மேனி மண் பார்த்துக் கவிழ்ந்தும் பின்னர் தேன் பார்த்து மலர்க்கையூன்றிச் செம்மையாய்த் தவழ்ந்து நின்றும் தான் பார்க்க அங்கும் இங்கும் தள்ளாடி நடந்தும் கெண்டை மீன் பார்த்த கண்ணாள் பெண்ணாள் ஓராண்டு மேவல் உற்றாள்'