பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்பதில் குழவியின் வளர்ச்சியைக் கவிஞர் உற்று நோக்கி உரைக்கும் தன்மை வெளிப்படுகிறது; கலையழகும் கவிதைச்சுவையும் இப்பகுதியில் கூடிநின்று உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இதுகாறும் கண்டவற்றால் பாவேந்தர் பெண்களின் அழகு, வான், கடல், நாட்டின் இயற்கை எழில், குழந்தை ஆகியவற்றை உருவகப் பாங்கிலும், உவமை நிலையிலும், இயற்கைச் சூழலின் அடியாகவும் வருணித்துக் கவிதைக்குச் சிறப்பினைச் சேர்த்துள்ளார் என அறியலாம். சொல்லாட்சி கவிதை கவிஞனின் கருத்தைக் காத்து வேண்டு வோர்க்கு வேண்டும்போது அளிக்கின்ற இன்பக் கருவூல மாகும். எவ்வாறாகினும் கவிஞன் படைக்கின்ற சொற் கூறு - கவிக்கூறு யாவும் காலம் கடந்து வாழ்வதில்லை. தீபங்கள் பல உண்டு - பல காலங்களில் ஏற்றப்படுகிறது. என்றாலும் கார்த்திகைத் தீபம் தனிச் சிறப்பினை எட்டுகிறது. மலர்கள் பல பூத்து உதிர்ந்து விடுகின்றன. அவற்றில் ஒரு சிலவே பிஞ்சாகி, காயாகி, கனியாகிப் பயன் பாட்டை நல்குகின்றன. அதுபோலவே கவிஞன் எண்ணற்ற சொற்கூறுகளை ஆக்கி அளித்தபோதிலும் அவன் உளம் கொள, தேர்ந்து எடுத்துக் கையாளுகின்ற சொற்களே அவன் கவிதையின் வாழ்விற்கு உயிர் ஊட்டுகின்றன. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் கவிதை எழுதப் புகும்போது, சொற் கூட்டங்கள் எனை வைத்து ஆளுதி, எனை வைத்து ஆளுதி' என்று கேட்டு இரங்குதலாகிய சொற்படை பெருக்கெடுத்தல் என்று அவர் கூறும் பாங்கும்; பாவேந்தர் கவிதை புனைய ஏடெடுக்க: குயில், மயில், பெண், இயற்கை அனைத்தும் என்ன எழுத வேண்டும் எனும் நிலையில் ஒவ்வொன்றும் விண்ணப்பம் செய்தலும் நோக்கத் தக்கவை. ஆனால் கவிஞன் அதனை எல்லாம்