பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重82 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மலர்க்காம்பினை உவமை காட்டி, புறாவையும் புள்ளின மலரையும் நம் கண்முன் காட்சியாக்குகின்றார். கடிமலர்ப்பூஞ் சோலையுண்டு, மான்ஷேமம் மயில் ஷேமம், பசுக்கள் ஷேமம் இன்னபடி இவ்விடம்யா வரும் எவையும் ஷேமமென்றன் நிலையோ என்றால் இருக்கின்றேன் சாகவில்லை என்றறிக..' இதில் காதலனைப் பிரிந்த வேதனை மிகுதியால் அவனுக்கு ஒலை திட்டுகின்றாள் மனைவி. நான் வாடுகின்றேன். ஆதலால் விரைவில் வாருங்கள் என்று எழுதியிருக்கலாம். ஆனால், அவ்வாறின்றி, அதனைப் புதிய கோணத்தில் ஆக்குகின்றார். இருக்கின்றேன் சாகவில்லை என்றறிக என்பதில் காதற்பிழம்பு - கவினுற ஒளிரும் காட்சியைக் காணமுடிகிறது. கூடத்திலே மனப்பாடத்திலே-விழி கூடிக்கிடந்திடும் ஆணழகை ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்-அவள் உண்ணத் தலைப்படு!நேரத்திலே பாடம் பிடித்து நிமிர்ந்த விழி i தன்னில் பட்டுத் தெறித்ததுமானின் விழி ஆடை திருத்தி நின்றாள் அவள்தான்-இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.' இதில் காதலின் வெளிப்பாடு வெள்ளோட்டமாகிறது. காதலி தனது காதலனை இதயமலரில் இருத்தி, கண் மலரால் கண்டு ஆடை திருத்தும்போது புதியதொரு கவிதையாகத் தோன்றுகிறாள். காதல் எண்ணத்தை விளக்கும் காட்சிப்படமாக 'ஆடை திருத்தி நின்றாள் அவள் தான்-இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்' என்னும் சொல்லோவியம் அமைகிறது.