பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அமைகின்றன; கவிதையின் நிலைபேற்றுக்குக் காரணமா கின்றன. முடிவுரை போவேந்தர் பாடல்களில் இலக்கியம்’ எனும் இக் கட்டுரை இலக்கியக் கூறுகளான விழுமிய உணர்ச்சி, உயரிய கற்பனை, சிறந்த கருத்து, அழகிய வடிவம் ஆகியன ஒருங்கே இணைந்து பாவேந்தரின் கவிதைகளில் ஒளிர்கின்ற மையை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகின்றது. கருத்து விளக்கக் கருவிகளான உவமை, உருவகம், வருணனை, சொல்லாட்சி ஆகியன ஏற்ற இடத்தில் ஏற்றவாறு அமைந்து இலக்கிய நுகர்வுக்குத் துணை புரிகின்றன. முடிவாக, பாவேந்தரின் கவிதைகள் வாழும் இலக்கிய வகையைச் சார்ந்தவை; காலவெள்ளத்தை வெற்றி கொள்ளும். கருத்துப் பெட்டகங்களாய்த் திகழ்பவை எனலாம். அடிக்குறிப்புகள் 1. சாமி. சிதம்பரனார், இலக்கியம் என்றால் என்ன?, ப. 10. - 2. க. த. திருநாவுக்கரசு, திருக்குறள் நீதி இலக்கியம். ப. 81. 3. மு. வரதராசனார், இலக்கியத்திறன், ப. 54, 4. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 113. 5. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 49. 6. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, பக். 109.110.