பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 17 தமிழர்களின் தமிழின் விடுதலையைப் பற்றி எண்ணத் தொடங்கினார். சேரமாதேவி குருகுலத்தில் வ. வே. சு. அய்யர். பிராமணர்க்குத் தனியாக உணவும், பிராமணரல்லாத மாணவர்க்குத் தனியாக உணவும் வழங்கியதை எதிர்த்து, காங்கிரசில் கிளர்ச்சி செய்த ஈ.வெ. இராமசாமிப் பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு முதலியவர்களது முயற்சிகள், தோல்வியுற்றமையால் அவர்கள் சுயமரியாதை இயக்கமென்று தனித்ததோர் இயக்கம் தொடங்கினர். சாதி சமயப் பூசல்களை அறவே களைவதாக ஆர்ப்பரித்தது சுயமரியாதை இயக்கம். சாதி சமய பேதங்கள் ஒழிந்தால் தான் நாட்டிற்கு நலமென நினைத்த பலரைச் சுயமரியாதை இயக்கம் கவர்ந்தது. இம் மாதிரி கவரப் பட்டவர்களுள் பாவேந்தரும் ஒருவர். தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைப் பாதையில் நடக்கலானார் பாவேந்தர். பகுத்தறிவுக்கு ஏற்காதவற்றை அவர் 'குப்பைக் களமென ஒதுக்கினார். சமயச் சடங்குகளும், கண்மூடிப் பழக்க வழக்கங்களும், கட்டியளந்த புராணக் கதைகளும் அவரின் கண்டனக் கணைகளுக்கு ஆட்பட்டன. ஈரோட்டுப் பாசறையில் உருவாகி வளர்ந்து கொண் டிருந்த குத்துாசி குருசாமி, மா. சிங்காரவேலர், ப. ஜீவா னந்தம், சாமி. சிதம்பரனார் போன்றவர்களிடமும் தமிழறிஞர்களான மயிலை சீனி. வேங்கடசாமி போன்றவர் களுடனும் நெருங்கிப் பழகினார். பாவேந்தர் சுயமரியாதை இயக்கத்தில் கொண்ட ஈடுபாட்டைப் போன்றே பொதுவுடைமை இயக்கத்திலும் நாட்டங்கொண்டார். பொது மைக் கருத்துத் தமிழர் களின் பழம்பெரும் சொத்து. வள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பேசப்பெற்ற கருத்து. இக்கருத்து,