பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழ் இயக்கம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே பாரதிதாச னாரின் முழக்கமாக இருந்தது. இத் தமிழ் இயக்கம், மற்ற இரு இயக்கங்களிலும் ஊடுருவி நிற்கின்றது. அதனால் தான் திறனாய்வாளர்கள் கூடப் பாவேந்தரை, திராவிட இயக்கம், நாத்திக இயக்கம், பொதுவுடைமை இயக்கம், சீர்திருத்த இயக்கம் என வெல்லாம் இயம்புவதை விடத் தமிழியக்கம் என்பதே தக்கதாகும்' என்கின்றனர். தமிழ் நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாவேந்தர் ஏன் கூறினார்? கூறவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று சிந்திப்போமானால் அதற்கு இரு காரணங்கள் புலப்படுகின்றன. ஒன்று தமிழில் பிறமொழிக் கலப்பு. மற்றது அக்காலச் சூழ்நிலை. தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழில் வடமொழி கலக்கத் தொடங்கிவிட்டது. பிறகு பெளத்த சமண சமயங்களின் வழி பாலி மொழி வந்து கலந்தது. பல்லவர் காலத்தில் மீண்டும் வடமொழி செல்வாக்குப் பெறுகின்றது. இச்செல்வாக்கு பக்தி இலக்கியக் காலம் வரை தொடர் கின்றது. அதனை அடுத்துச் சோழர் காலத்திலும், வடமொழியே செல்வாக்குப் பெற்ற மொழியாக இருந்திருக்கின்றது. பிறகு இசுலாமியர்களின் படை யெடுப்பால் அரபுமொழியும், பார்சிய மொழியும், இந்துஸ் தானியும் வந்து கலந்தன. ஐரோப்பியர் வருகையினால் போர்ச்சுகீசிய மொழி, பிரஞ்சு மொழி, ஆங்கில மொழி போன்றவைகளும் வந்து கலந்து ஒரு கலப்பு மொழியாகவே தமிழ் காட்சி தந்தது. இப் பிறமொழிச் சொற்களை நீக்கித் தமிழைத் தனித் தமிழாகவே போற்ற வேண்டும் என்ற எண்ணம் பாவேந்தர் உள்ளத்தில் கருவுற்றது. தொடக்கக் காலத்தில் பாவேந்தர் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தியும் கவிதை புனைந்தார். பின்பு