பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 195 மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப் பட்டுத் தனித்தமிழைப் போற்றுவாரானார். காலச் சூழ்நிலை என்று பார்க்கும்போது, அடிமை வரவின் விடியற்காலம் அது! தமிழனே தமிழை எதிர்த்த காலம்! ஆங்கில மோகம் ஆட்டிப் படைத்த நேரம்! ஆட்சியிலும், அலுவலகங்களிலும், பள்ளியிலும், கல்லூரி யிலும், ஆங்கிலம் அரசோச்ச, கோயில்களிலும், விழாக்களிலும், இசையரங்குகளிலும், மணமேடைகளிலும் வடமொழி வலம் வந்த காலம்... பிறமொழியில் பெயர் மாற்றம் கொண்டு கூத்தர் நடித்த காலம் அது. தமிழ் நாடும், தமிழ்மொழியும் தமிழன் தன் மானமும் விடுதலை பெற்று வளர்ச்சி அடைய வேண்டுமானால் தமிழன் காரியத்தில் தமிழன் அல்லாதவன், அவன் எப்படிப் பட்டவன். ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழித்தாக வேண்டும். இதை வேறு எதை வைத்தாவது ஒழிக்க வேண்டும்" என்று தந்தை பெரியார் சூளுரைக்க வேண்டிய சூழ்நிலை அமைந்த காலம்: . . இத்தகைய காலச் குழல்தான் பாவேந்தரைத் தமிழ் இயக்கம் காண உந்தியது. இத்தமிழ் இயக்கத்தை மக்களிடம் பரப்ப இவர் மேற்கொண்ட படி முறைகள் மூன்று. முதல் நிலையில் கொள்கைகளைத் தான் பின்பற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நின்றார். அடுத்து மக்களுக்குத் தமிழ் உணர்ச்சியை ஊட்டுகின்றார். தமிழ் உணர்ச்சியை ஊட்டிய பிறகு தமிழ் மக்களை ஒன்றுபடுத்த - ஒற்றுமை யுடன் வாழ வேண்டுகின்றார். மக்கள் ஒற்றுமையுடன் சேர்ந்த பின்பு தமிழ்ப் பகையை அழிக்க முயல வேண்டும் - அப்பொழுதுதான் முழு வெற்றி கிடைக்கும் என்கிறார். பாவேந்தரும் தமிழும் ஒரு கொள்கையை மக்களிடம் பரப்பும் ஒருவர் முதலில் அக்கொள்கையைத் தான் பின்பற்றி ஒழுக வேண்டும். எளிமையை மக்கட்குப் போதித்த மகாத்மா காந்தி, தாமே