பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதற்கோர் எடுத்துக்காட்டாகக் கடைசி வரை திகழ்ந்தார். தாய்மொழி போற்ற வேண்டும்; தமிழ் போற்றி வாழ வேண்டும் என முரசு கொட்டிய பாவேந்தர் தம் வாழ்வைத் தமிழுடன் இணைத்துக் கொண்டார். பாவேந்தர், செந்தமிழே! உயிரே! நறுந் தேனே செயலினை மூச்சினை உனக்களித் தேன்ே கைந்தா யெனில் நைந்து போகும்என் வாழ்வு கன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 1, ப. 34. என்று தமிழோடு தாம் இணைந்து விட்டதை உணர்த்து கின்றார். மேலும், சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் --- தலைமுறை ஒருகோடி கண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும். பிள்ளை பிறந்தேன் யாருக்காக? பெற்ற தமிழ்மொழிப் போருக்காக உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும் உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக -பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 23. என்று தமிழுக்காக எதையும் இழக்கத் தயாராக உள்ளேன் என்கின்றார்; தமிழை உயிராக மதித்து ஒழுகுகின்றார். அளப்பிலா உவகை ஆடற்றமிழே நீ என்றன் ஆவி தமிழை என்னுயிர் என்பேன் கண்டிர் உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழைத் தம் உயிராக மதித்தொழுகுகின்றார். மேலும், பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் பக்கத் துறவின் முறையார்