பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 197 தயைமிக உடையாள் அன்னை - என்னைச் சந்ததம் மறவாத் தந்தை குயில்போல் பேசிடும் மனையாள் - அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என் அகத்தினில் உறைதல் கண்டிர். -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1 ப. 87. என்று தமிழ் மொழியைத் தம் உறவுகளை விட மேலாகக் கருதுகின்றார். இவ்வாறு தமிழை முதலில் போற்றிப் பின்பு மக்களும் போற்றவேண்டும் என்கின்றார். இவர் மக்கட்குத் தமிழ். உணர்வைப் பல முறைகளைப் பின்பற்றி ஊட்டுகின்றார். தமிழின் தொன்மையை எடுத்துக்காட்டல், தமிழின் சிறப்பியல்புகளைக் கூறல், பிற நாட்டில் மொழியைப் போற்றும் பாங்கினைக் கூறல் போன்றவை அவற்றுள் சில. தமிழின் தொன்மை ஒருவனைத் திருத்த வேண்டுமானால் அவனிடம், வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்; நாலடியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது" என்று கூறுவதைவிட நின் பாட்டனார் இவ்வாறு வாழ்ந்தார் நின் தந்தையார் இவ்வாறு இருந்தார் நீ இப்படி இருக்கலாமா என்று கேட்பதன்மூலம் அவனை எளிமையாகத் திருத்தலாம். அது அவன் உள்ளத்தின் ஆழத்தில் படியும். சங்க காலத்தில், சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானையால் இடறிக் கொலை செய்யப் பணித்தான். இக் கொடுஞ்செயலைத் தடுக்க வேண்டிக் கோவூர் கிழார் சோழனைத் திருத்த வேண்டி அவன் மூதாதையரின் பழம். பெருமைகளை எடுத்துக் கூறியே திருத்துகின்றார். நீயே, புறவி னல்ல லன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை