பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சோவியத்து நாட்டில் செயலாக மலர்ந்தபொழுது பாரதியார் வரவேற்றார். தன் மான வாழ்விற்குப் பொதுமைச் சமுதாய அமைப்பு வேண்டுமென்பதைக் கண்டுகொண்ட பாவேந்தர், எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்' என்பதனை உலகிற்கு உணர்த்தத் தனிக் கவிதைகளையும், காவியங்களையும் படைத்துக் கொண்டிருந்தார். இது பற்றிப் பாவேந்தர் பாடல்களில் இயக்கம்" என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தொட்டு மணந்த துறைகள் மேலை நாட்டிலே, ஜான்சன் என்னும் பேரறிஞரைக் குறிப்பிட்டுக் கோல்டு சுமித்து" என்னும் கவிஞர் பேசும் பொழுது அவர் தொடாத துறை ஒன்றுமில்லை; தொட்ட துறைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை' என்றோர் அருமையான கருத்தினை வெளியிட்டார். இது போன்று பாரதிதாசனார் கவிதைக்கலை நன்கு கைவரப் பெற்றவர். கலைகளிலே நுண்மையானதொரு கலை க. வி ைத க் கலையாம். அக்கவிதைக் கலையிலே தன்னேரில்லாத் தமிழ்ப் பெருங்கவிஞராய்ப் பாரதிதாசனார் உலவினார். அவர் எழுதுகோல் கவிதையின் வண்ணத்தினை யெல்லாம் கவினுறக் காட்டியது. இயற்கை, காதல், பெண்கள், சமூகம், நாடு, மக்கள், மொழி, இனம், தொழிலாளர் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் அவர் சிந்தனை படர்ந்தது. அவ்வெண்ணத்தின் விளைவாகக் கவிதைப் பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் நித்த நித்தம் பூத்துக் குலுங்கின. . . பாவேந்தர் பத்திரிகைத்துறை, திரைப்படத் துறை போன்றவற்றுடனும் தொடர்பு கொண்டிருந்தார். வ. வே. சு. ஐயர் நடத்திய தேசபக்தன் பத்திரி கையில் கட்டுரைகள் எழுதினார். தேச சேவகன்” என்னும் பத்திரிகையை இவரே ஐந்து ஆண்டுகள் நடத்தினார். தொடர்ந்து ஆத்மசக்தி, டுப்ளேக்ஸ்,