பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{198 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இவரே புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் களிறுகண் டமூஉ மழாஅன் மறந்த புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கனோ வுடையார் கேட்டனை யாயின்ரி வேட்டது செய்ம்மே!’ இம்முறையைப் பின்பற்றியே பாவேந்தர் அவர்களும் தமிழின் தொன்மையைப் பரக்கக் கூறுகின்றார். தமிழனே உலகின் முதன் மனிதன் என்றும் அவன் முதலில் பேசியது தமிழ் மொழியே என்றும் கூறுகின்றார். ஆதி மனிதன் தமிழன்தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன். -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 121. மேலும் ஞாயிறும் திங்களும் தோன்றிய அன்றே தமிழ் தோன்றிவிட்டது என்பதனை, திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்... -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 100. என்கிறார். பண்டுவந்த செழும்பொருளே பார் அடர்ந்த இருட் கடலில் படிந்த மக்கள் கண்டு வந்த திருவிளக்கே களிப்பருளும் செந்தமிழே. -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 5. என அதன் பழைமையைச் சொல்லி, சங்கத் தொட்டிலில் வளர்ந்த தமிழ் என்று மேலும் அதன் தன்மைக்கு மெருகேற்றுகின்றார்.