பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 199 வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழ் என் அரும்பேறு துய்யதான சங்கமெனும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை கையிலே வேலேந்தி (தம்) கடல் உலகாள் மூவேந்தர் கருத்தேந்திக் காத்தார் அந்தக் கன்னல் தமிழும் -பாரதிதாசன், இசையமுது, தொகுதி ப. 46. இவ்வாறு தமிழின் தொன்மையை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களின் உள்ளத்தில் தமிழ் உணர்வை விதைக் கின்றார். தொன்மையானது என்ற ஒரு காரணத்தால் மட்டுமே தமிழ் உயர்ந்ததா என்ற எண்ணம் எழும் அல்லவா? அதனால் தமிழ் தொன்மையானது மட்டுமல்ல பல சிறப்புகளைப் பெற்றுப் பாரில் சிறந்த மொழியாகத் திகழ்கின்றது என்று அதன் ஒவ்வொரு சிறப்பினையும் எடுத்துக்கூறி, தாம் விதைத்த தமிழ் உணர்வுக்கு நீர் ஊற்றுகின்றார். o தமிழின் இனிமை மொழியியல் அறிஞர்கள் குற்றியலுகரத்தைப் பற்றிக் கூறும்போது, வல்லொற்று ஈறு, ஒலிப்பதற்குக் கடினமாகை யால் அதனை எளிமைப்படுத்தவந்த மொழித்துணை உகரத்தையே பிற்காலத்துக் குற்றியலுகரம் என்று இலக்கணிகள் கூறுகின்றனர் என்பர். அதாவது தமிழ் மொழி உகர ஈற்றைப் பெற்று எளிமை உடைய மொழி யாக, இனிமை உடைய மொழியாக இருக்கின்றது. இதனைத் தமிழ் மொழியின் அண்டை மொழியாகிய தெலுங்கு மொழியிலும் காணலாம். இத்தமிழ் மொழியின் இனிமையை நன்கு நுகர்ந்த பாவேந்தர் மொழிகளிலே தமிழ் மொழிதான் இனிமையானது என்கின்றார்.