பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தனிமைச் சுவையுள்ள சொல்லை...எங்கள் தமிழினும் வேறெங்கும்யாங் கண்டதில்லை --பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1. ப. 94 என்று கூறி அந்த இனிமைத் தமிழுக்கு ஒப்பான ஒரு பொருளைக் கூற விழைகின்றார். தமிழ் படித் தேன்' அதை உண்ணத்தான் தமிழ் படித்தேன்’ நான் -பாரதிதாசன், இளைஞர் இயக்கம், ப. 11 என்று தேனுடன் ஒப்பிடுகின்றார். அத்துடன் நில்லாது. வள்ளுவரை நினைவுபடுத்துவது போல், தழுவு குழல்யாழ் கிளிமொழி யுமோர் அமிழ்தும் உனையே நிகர் ஆமோ -பாரதிதாசன், பன்மணித்திரள், ப. 6. என்று குழல் யாழ் மட்டுமல்லாது கிளிமொழி, அமிழ்து இவற்றுடன் ஒப்பிட்டு மகிழ்கின்றார். மேலும், மங்கை ஒருத்தி தரும் சுகமும்-எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப் போம் -பாரதிதாசன், பன்மணித்திரள், ப. 85. என்றும், தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! என்றும் நிலவு, மணம், வாழ்வு, மது, இளமை, அறிவு: கவிதை போன்ற பலவற்றுடன் ஒப்பிட்டு மகிழ்கின்றார். (பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 89.) இவ்வாறு தமிழின் தொன்மையையும் இனிமையையும் எடுத்துக்கூறி வள்ளுவரையும் வாழ்வையும் கூறித் தமிழ் உணர்ச்சியை வளர்க்கின்றார். மக்களுக்குத் தமிழ் உணர்ச்சி ஏற்பட்ட பின் அவர் வேண்டுவது ஒற்றுமையை.