பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 201 தமிழர் ஒற்றுமை மக்களை ஒன்றுபடுத்தாமல் நாம் எந்த மாற்றத்தையும் எற்படுத்திவிட முடியாது. மக்களின் ஒத்துழைப்பால் தான் ஸ்பார்ட்டா, கிரேக்கத்தில் வலிமை மிகுந்த ஒரு நகரமாக விளங்கியது. மக்களை ஒருங்கிணைத்த பின்பே சீனப் பொதுவுடைமையை மாசேதுங்கால் ஏற்படுத்த முடிந்தது. சாதி மதங்களைக் கடந்து இந்திய மக்கள் ஒன்றுபட்டதால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. எனவே மாற்றம் எற்பட மக்களின் ஒத்துழைப்பு மிகமிகத் தேவையானது. இதனை உணர்ந்த பாவேந்தர், தமிழ் உணர்ச்சி மட்டும் பெற்றுவிட்டால் பகையை ஒழிக்கமுடியாது. பகையை ஒழிப்பதற்கு முன்னால் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும். ஒற்று ைமயுடன் பகையை எதிர்த்தால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்று எண்ணித் தமிழர்களை ஒற்றுமையுடன் இணையத் துரண்டுகின்றார். தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும். -பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 21. எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்குப் பிறப்பினும் அயலான் அயலனே! செங்குருதி தன்னில் தனித்தன்மை வேண்டும் சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும். -பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 42. கலப்பில்லாமல், புல்லுருவிகள் ஊடுருவாமல், தமிழர்கள் எல்லாம் ஒன்றுபடுதல் வேண்டும். இரத்தக் கலப்பு இல்லாமையைப் பாவேந்தர் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட வேண்டும் என்று கூறிய பாவேந்தர் எவ்வாறு ஒன்றுபட வேண்டும் என்பதனையும் கூறுகின்றார். பா-13