பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும் உணவினிலே ஒன்றாதல் வேண்டும்! நல்ல நடையினிலே ஒன்றாதல் வேண்டும்! பேசும் நாவிலும் எண்ணத்திலும் ஒன்றாதல் வேண்டும் -பாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 39. என்று ஒன்றாக இணையும் முறையைக் கூறுகின்றார். மக்கள் இணையும் நெறியைக் காட்டிய பாவேந்தர் அவ்வாறு இணையும்போது ஏற்படும் சிக்கல்களையும் அதற் கான தீர்வையும் கூறுகின்றார். ■ ஒன்றுசேரப் பொறுமை வேண்டும் ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பது நாலடியார் நவிலும் நன்மொழி பொறையுடைமை இல்லையென்றால் ஒற்றுமையும் இல்லை. தமிழர்கள் ஒன்றுபடும் வேளையில் ஒரு தமிழர் மற்றொரு தமிழருக்குத் தீமை விளைவித்தால் அதனைப் பொறுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பொதுநலக் குறிக்கோளை அடைய முடியும். தமிழருக்குத் தமிழர்தாம் இடர் செய்தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும் தமிழரெலாம் தமிழரன்றோ?... தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால் தனிமுறையில் செய்ததென அதை மறந்து தமிழரது பொதுநலத்திற்கு உயிரும் தந்து தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும். -பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 21. என்கின்றார். ஒரு செயல் நடைபெறுகின்றது என்றால் ஒரு பயன் விளைய வேண்டும். பயனற்ற செயல் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பயன்படாதது மட்டுமல்ல, ஒருசில வேளையில் தடையாகவும் அமைந்துவிடும். தடையை