பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயர்வான் தமிழ்ப் பகையாளனும் தானே பெயர்வான்! -பாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 115. நைந்தாய் எனில்ருைந்து போகும் என்வாழ்வு கன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே. -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 1, ப. 34.

  • தமிழ் அழிந்தால் தமிழர் அழிவர் என்று கூறுவதில் தமிழர் என்பது தமிழரின் உடலை அல்ல. தமிழரின் பண்பாட்டை! தமிழரின் நாகரிகத்தை! தமிழரின் ஒழுக்கத்தை! தமிழ் அழிந்தால் இம்மூன்றுமே அழிந்துவிடும் என்கின்றார்.

பண்டைய கிரேக்க மொழி அழிந்தது; கூடவே பண்டைய கிரேக்கப் பண்பாடும் அழிந்தது. பண்டைய சுமேரிய மொழி அழிந்ததும் அதன் பண்பாடும் அழிந்தது. எனவே மொழி அழிந்தால் அம்மொழி வளர்த்த பண்பாடும் அழிந்து போகும். தமிழ்ப் பண்பாடு காக்க வேண்டு. மானால் முதலில் தமிழைக் காக்க வேண்டும். தனித் தமிழைப் போற்ற வேண்டும். பிறமொழிக் கலப்பு தமிழில் ஏற்பட்டால் பிற பண்பாடும் தமிழில் கலந்து கலப்புப் பண்பாடு உருவாகிவிடும். எனவே தமிழ்ப் பண்பாடு தனியாக நிறுவ வேண்டுமானால் தனித்தமிழைப் போற்ற வேண்டும் என்று சிந்தித்தே தமிழ் அழிந்தால் தமிழர் அழிவர்" என்கின்றார் பாவேந்தர். தமிழ்ப் பண்பாடு காக்கப்பட வேண்டுமானால் ஒன்று. பட்ட மக்கள் வீறுகொண்டு எழுதல் வேண்டும். மக்களுள்ளும் இளைஞர்கள் வீறுகொள்ளுதல் வேண்டும். இளைஞர்களே புரட்சியை வெற்றிகரமாக முடிக்க வல்லவர்கள். உருசியப் புரட்சி' யின் தந்தையான லெனின், தம் வெற்றிக்கு இளைஞர்களையே நாடினார். இந்தியாவில் கூட, மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை,