பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 205 நிறுத்திவிட்டுக் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அரசியலில்-போராட்டத்தில் குதித்ததால்தான் விடுதலை அடைய முடிந்தது. அதைப் போலவே பாவேந்தரும் தம் தமிழ் இயக்கம் வெற்றி பெற இளைஞர்களையே அறை கூவல் விடுத்து அழைக்கின்றார். பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியென செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகை விரி! எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 90. எது செய்க நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே இன்னே புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே ஆர்த்தெழுக! தமிழுக்குத் துறைதொறும் துறைதொறும் அழகு காப்பாய் இதுதான்நீ செய்யத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே F-H பாரதிதாசன், தமிழியக்கம், ப. 10. என்று தமிழ் இளைஞன் செய்யத்தக்க முதற்பணியைக் கூறுகின்றார். அடுத்து எங்கெங்கெல்லாம் தமிழ் வேண்டும் என்று தமிழியக்கம் என்ற தமது நூலில் பட்டியல் போட்டுக் காட்டுகின்றார். வணிகத்துறையில் தமிழ் இன்று, உலகத்தின் பொருளாதாரம் வணிகத்தில் அடங்கி உள்ளது எனலாம். ஒரு நாடு பொருளாதாரத்தில்