பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முன்னேற வேண்டுமானால் நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டும். வணிகத்தின் உதவியுடன்தான் தொழில் மயமாக்க வேண்டும். மேலும் தொழிலால் உற்பத்தி ஆகும் பொருளை விற்பனை செய்வதற்கும் வணிகம் வேண்டும். எனவே இவ்விரு நிலையிலும் வணிகத்தின் தேவை வேண்டப் படுகின்றது. மக்களிடையே அதிகத் தொடர்பு உடைய துறைகளுள் வணிகமும் ஒன்று. இவ்வணிகம் தமிழ்நாட்டில் தமிழில்தான் நடைபெறுதல் வேண்டும் என்கின்றார் பாவேந்தர். ஆனால் அவர் காலத்தில் வணிக முகவரிகளும் விளம்பரங்களும் பிறமொழியிலேயே இருந்தன. அதனால் மனம் வெம்பிய பாவேந்தர், ஆணிவிற் போன்முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும் நாணமற்ற தல்லாமல் கந்தமிழின் கலங்காக்கும் செய்கை யாமே? தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை - பாரதிதாசன், தமிழியக்கம், ப. 13. தி டு ' வேதனையை வெளியிடுகின்றார். வேதனைப் படுவதுடன் நின்று விடவில்லை. அதற்கு மருந்தையும் சொல்கின்றார் பாவேந்தர். ஏனெனில் அவர் ஒரு புரட்சிக் கவி. வேதனையை மட்டும் வெளியிட்டிருந்தால் ஆயிரக் கணக்கான கவிஞர்களில் அவரும் ஒருவராக இருந்து தெரியாமல் போயிருப்பார். தமிழ்நாட்டின் புண்களை மட்டும் பாட வந்தவர் அல்லர் பாவேந்தர்; அதற்கான மருந்தையும் கூறியவர். அவர் கூறும் மருந்து,