பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 207 வாணிகர், தம்முகவரியை வரைகின்ற பலகையில், ஆங் கிலமா வேண்டும்? மானுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும். - பாரதிதாசன், தமிழியக்கம், ப. 13. என்கின்றார்; .ெ ச ல் லி ச் சொல்லித்தான் திருத்த வேண்டும். வணிகர்க்கும் தமிழென்றால் வெறுப் புண்டோ?' இல்லை. ஆனால் அவர்கள், தமிழுக்கு அழிவை உண்டாக்குகின்றோம் என்பதை உணராமலே அதனைச் செய்கின்றனர். எனவே அவர்களிடம் அதனை மாத்துக்கூறி அவரைத் திருத்துதல் வேண்டும். மேலும் ப வணவு விடுதிகள், துணிக்கடைகள் போன்றவற்றிலும் தமிழ்ப் பெயர்கள் வேண்டும் என்றார். தமிழ் எழுத்து களால் எழுதினால் மட்டுமே அது தமிழாகி விடாது. " உடுப்பி ஓட்டல்' மெடிக்கல் ஷாப்' என்று எழுதுவது எழுத்தால் தமிழாக இருந்தாலும் பெயரால் - அது ய எணர்த்தும் பொருளால் பிறமொழியே. இவற்றை உடுப்பி உணவகம் மருந்துக் கடை' என்று எழுதினால் அது தமிழ்ப் பெயராகும். இத்தகைய மாற்றத்தையே பாவேந்தர் வேண்டுகின்றார். இசையில் தமிழ் சங்கக் காலத்திலேயே பரிபாடல் இசையோடு பாடப் பெற்றது. இடைக்காலத்திலும் நாயன்மார்களும், ஆழ்வார் களும் இசைப்பாமாலை பாடியே இறைவனை வழி பட்டனர். அக்காலக் கட்டத்தில், இசையொடு எழுந்ததே திருவாசகம். இதன் இசை இனிமையை நன்கு நுகர்ந்த புலவர்கள் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்' என்று போற்றினர். இசை உள்ளத்தை