பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 19 தாய்நாடு, புதுவை முரசு முதலிய பத்திரிகைகளையும் நடத்தினார். பிற்காலத்தில் நடத்திய குயில் போன்ற ஒரு கவிதைப் பத்திரிகையைத் தொடக்க நாளிலேயே நடத்தினார். அரசியல் கலவாமல் கலைக்காகவே நடத்தப்பட்ட இதழ் பூரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்'. சுத்தானந்தர், தேசிக விநாயகம் போன்றவர் களெல்லாம் அதில் கவிதை எழுதினார்கள். கவிதா மண்டலத்தில் புத்தக மதிப்புரை கூட கவிதையிலேதான் வந்தது". இப்பொழுது பாவேந்தர் அவர்களின் மகனார் திரு. கோபதி என்னும் மன்னர் மன்னன் அவர்களின் திருமகனார், பாட்டனார் பாவேந்தர் நினைவாகக் குயில்" இதழைத் தொடங்கிப் புதுவையிலிருந்து ந - த் தி: வரு கிறார். - பாவேந்தர் தமிழ்த் திரைப்படத் துறையுடனும் உறவு கொண்டிருந்தார். தமிழ்த் திரைப்படத்துறையில் வட. மொழியின் பித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. 1937-ல் பாவேந்தர் நடிப்புச் செல்வர் தி. க. சண்முகம், தி. க. பகவதி நடித்த பாலாமணி அல்லது பாக்தாத். கிருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதினார். பின்னால் அவரது பல இனிய பாடல்கள் கருத்தழகோடும், சொல்லழகோடும் திரையரங்குகளில் ஒலித்தன. அவரது எதிர்பாராத முத்தம்', 'பொன் முடி யாக’ப் படமாகி உலா வந்தது. 7

  • இவரே காளமேகம், வளையாபதி முதலிய படங் களுக்கு வசனமும் பாடல்களும் எழுதி அத்துறையில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியானார் . 8 ம க |ா க வி பாரதியார் வாழ்க்கையைப் படமாக்க இறுதிக்காலத்தில் பாவேந்தர் முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லை.

மக்கட் செல்வங்கள் 1920-ல் பழனி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட பாவேந்தர் அவர்களுக்கு 12.9.1921-ல் தலை