பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உருக வைக்கக் கூடியது. இசையை நுகராதவன் கொலை காரனாக இருப்பான்’ என்ற ஆங்கிலப் பழமொழி இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்விசை தமிழிசையாகவே இருக்க வேண்டும் என்று பாவேந்தர் விரும்புகின்றார். அவர் காலத்தில் தெலுங்கு இசையே தமிழ் நாட்டில் அரசோச் சிக் கொண்டிருந்தது. இதனைப் பற்றிக் கூறும்போது, தெலுங்குதமிழ் நாட்டிலேன்? செத்த வடமொழிக்கு இங்கே என்ன ஆக்கம்? இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசையலாமோ? -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 21. என்கின்றார். இசை மொழிக்கு அப்பாற்பட்டது என்றும், தமிழ் மொழியின் அமைப்பு இசைக்கு ஏற்புடையதன்று என்றும் மேலும் தமிழ் மொழியில் இசைப்பாடல்கள் இல்லை என்றும் சிலர் கூறுவர் அதனை ஏற்காதீர்! மறுப்பீர் என்கின்றார் பாவேந்தர். தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள்! தமிழே பாடச் செய்யுங்கள்! அதற்காகத் திரண்டெ ழுங்கள்! இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை என உரைத்தால், அறையுங்கள்! தமிழமைப்பு நலமுள்ள இசைக் கொவ்வாது என்பார் வாலை நறுக்குங்கள்! இசைக்கு மொழி வேண்டாம் என்னும் விலங்குகளை வளையுங்கள் - பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 67. இவ்வாறு இசைக்கலையிலும் தமிழ்மொழி வேண்டும் என்கின்றார். இசைக்கும் மொழிக்கும் அதிகத் தொடர்பு இல்லை. அப்படி இருந்தும் பாவேந்தர் இசையிலும் மொழி வேண்டும் என்று வற்புறுத்துவதன் காரணம் இசை பண்பாட்டுடன் தொடர்புடையது. மக்களின் பண்