பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 209 பாட்டிற்கு ஏற்ற முறையில்தான் அம்மக்களின் இசையும் அமையும். இசையை மக்களிடம் இருந்து பிரிக்கப் பிரிக்க அவர்களின் பண்பாடும் சிறிது சிறிதாகச் சீர்குலைந்து கொண்டு வரும். இன்று மேலைநாட்டு இசை ஆட்சி செய்வது போன்று, அன்று தெலுங்கு இசை தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது. ஆகவே பாவேந்தர் தெலுங்கு இசையை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றார், தெலுங்கிசையின் செல்வாக்கு சிறிது சிறிதாகக் குறைந்தது. தமிழிசை வளரத் தொடங் கியது. ஆனால் அந்த இடத்தில் தமிழிசை வராமல் மேலைநாட்டிசை வந்து கொண்டிருக்கின்றது. எனவே பாவேந்தரின் ஆசை இன்றுவரை முழுமையாக நிறைவேற வில்லை எனலாம். படத்துறையில் தமிழ் படத்துறை (Film Industry) எல்லா மக்களிடமும் மிக நெருங்கிய துறையாக இன்று வளர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் படம் (Cinema) பார்க்காத மனிதர்களே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இத்துறையில் தமிழ் மொழியும், தமிழ்ப் பண்பாடும் சிறக்கவேண்டும், முதன்மை பெற வேண்டும் என்று விழைகின்றார் பாவேந்தர். அதற்கு இரண்டு வழிகளைக் கூறுகின்றார். ஒன்று, தமிழர்க்கே சலுகை காட்ட வேண்டும் தமிழ்த்திரைப் படங்களில் நடிப்பதற்குத் தமிழர்க்கே சலுகை காட்ட வேண்டும். - பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 105. இரண்டாவது, தமிழ்ப் புலவர் தனித்தமிழில் நாடகங்கள் படக்கதைகள் எழுத வேண்டும் ..... யாவும்