பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அமைப்பானும் செந்தமிழன் அதைக் காண்பானும் தமிழன் ஆதல் வேண்டும் - பாரதிதாசன், தமிழியக்கம் ப, 39. என்கின்றார். இவ் விரு நிலையிலும் மக்களின் மனநிலை கட்டாயம் மாறியே ஆகவேண்டும். செல்வம் திரட்டுதல் மட்டுமே குறிக்கோள் என்று திரைப்படம் எடுத்தலை வன்மையாகக் கண்டிக்கின்றார். செய்தித்தாளில் தமிழ் திரைப்படத்தை அடுத்து மக்களிடம் அதிகத் தொடர்பு கொண்டு உள்ளது செய்தித்தாள்களாகும். இவையும் செந்தமிழில் இருக்க வேண்டும் என்கின்றார். தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதுதல் கேடு நல்கும். தமிழிற்குத் தொண்டு செய்கின்றோம் என்ற மனப்பாங்கில் செய்தித்தாளை எழுதுதல் வேண்டும்செய்தித்தாள் செய்ய வேண்டிய பணியினையும் அதன் சிறப்பினையும் பாவேந்தர், அறிஞர் தம் இதயஒடை ஆழநீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக் குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்தாய்! நறுமண இதழ்ப் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 186. என்னும் அடிகளின் வாயிலாக உணர்த்துகின்றார். இதற்குத் தமிழர்கள் - தமிழின் இலக்கணமும் இலக்கி யமும் அறிந்த தமிழர்கள் - ஏடு நடத்துதல் வேண்டும்.