பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 21 1 இத்தகைய செய்தித்தாள்களையே மக்களும் விரும்பிப் படித்தல் வேண்டும். கோயிலில் தமிழ் உலக வரலாற்றைப் பின்னோக்கிக் காணும்போது ‘இறைமை உணர்வு முதன் முதலில் தமிழனிடத்தில்தான் தோன்றியது எனலாம். தமிழன் என்றால் அவன் மூன்று இலக்கணங்கள் நிறைந்தவனாக இருத்தல் வேண்டும். ஒன்று இறைவனை வழிபடுதல். பிறிதொன்று இயற்கை ஈடுபாடு; மற்றது பெண்மையைப் போற்றுதல். இம் மூன்றில் இறைமையை வழிபடுதல் தமிழரிடமிருந்து உலகெங்கும் பரவியது எனலாம். இறை வழிபாட்டில் அமைதி வேண்டும் என்பதற்காகத் தனி இடத்தில் கோயில் அமைத்து இறைவனை வழிபட்டனர். அக்கோயிலைக் கட்டுவித்தவன் தமிழன். கட்டியவனும் த மி மு ன். கருவறையில் இருக்கும் இறைவனை வடித்தவனும் தமிழன். அவ்விறைவனை வழிபடுபவனும் தமிழன். ஆனால் அவ்' விறைவன் முன் தமிழ்ப் பாமாலைகள் ஒதப்படாமல் வேத. பாராயணங்கள் அல்லவா ஒதப்படுகின்றன! இம்மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும்போது கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம் தெற்கோதும் தேவாரம் == திருவாய் நன்மொழியான தேனிருக்கச்