பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோயில் பால்? -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 28 அதற்குக் காரணம் தமிழர்களின் மனப்பான்மை, வட மொழி உயர்ந்தது என்ற எண்ணம். கோயில்களில் தமிழர்களின் நிலை என்ன? படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ் மானத்தை வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட்டிக்கு உரைப்பீர் "மந்த்ரம்' என்றே. -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 27. இந்த நிலை மாறவேண்டும். அவன் வழிபடும்பொழுது சொல்லும் * மந்த்ர'த்தின் பொருள் விளங்கவில்லை. பொருள் விளங்கா மொழியில் இறைவனை வழிபட்டால் உள்ளத்தில் இறைமை உணர்வு எப்படித் தோன்ற முடியும்? உள்ளத்தில் இறைமை உணர்வு தோன்ற வேண்டுமானால் தேவாரம், திருவாசகம், பாசுரங்கள் போன்றவற்றை அப்படியே எடுத்து இசைப்பதால் மட்டுமே இறைமையை உணர முடியும். அரசியல் தமிழ் ஜெர்மனி நாட்டில் ஜெர்மன்' ஆட்சிமொழி. பிரான்சு நாட்டில் பிரஞ்சு ஆட்சிமொழி. இங்கிலாந்து நாட்டில் *இங்லீஸ் (ஆங்கிலம்) ஆட்சி மொழி. துருக்கி நாட்டில் *துருக்கி ஆட்சி மொழி, பாரசீக நாட்டில் பெர்சியன்' ஆட்சிமொழி, பர்மா நாட்டில் பர்மிய மொழி ஆட்சி