பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 213. மொழி. சீன நாட்டில் சீன மொழி (சைனிஸ்) ஆட்சி மொழி. ஜப்பான் நாட்டில் ஜப்பான் மொழி (ஜப்பனிஸ்) ஆட்சிமொழி, அவரவர்கள் நாட்டில் அவரவர்களின் தாய்மொழி ஆட்சிமொழியாக உள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டுமானால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி தான் ஆட்சிமொழியாக இருத்தல் வேண்டும். ஆட்சி மொழி என்பது சட்டத்தில் மட்டும் இருத்தல் அன்று. நடைமுறை வாழ்க்கையிலும் தாய்மொழிதான் ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டும். கல்வித்துறையில், நீதித் துறையில், சட்டத்துறையில், மருத்துவத்துறையில், வான வியல் துறையில் என்று துறைதோறும் துறைதோறும் தமிழே ஆட்சிமொழியாக ஆளும் மொழியாக இருத்தல் வேண்டும். பாவேந்தரின் தமிழியக்கம்' என்ற நூல் 1945ஆம் ஆண்டு வெளி வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திராவின் பெரும் பகுதி, கர்நாடகத்தின் ஒருசில பகுதிகள் போன்றவற்றை இணைத்து மதராஸ் ராச்சியம்' என்று பெயர் வைத்து ஆட்சி செலுத்தி வந்தனர். இதனால் தெலுங்கரும், கன்னடியரும் சென்னையில் இருந்து தமிழ் நாட்டையும் சேர்த்து ஆட்சி செலுத்தி வந்தனர். பிறமொழியாளன் எல்லாம் தமிழ்நாட்டை ஆளுவது தவறு என்று எண்ணினார் பாவேந்தர். அதனால் அவர் ஒருங்கிணைந்த தமிழ் மக்களுக்கு, தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சாய் வருதல் வேண்டும்! தமிழ்ப் பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும் -பாரதிதாசன், தமிழியக்கம். ப. 19.