பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*214 புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று கூறுகின்றார். தமிழ் ஆய்ந்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வந்தால்தான் தமிழ்மொழிக்கும், தமிழருக்கும் நன்மையை உளமாரச் செய்வர். இதனால் தமிழ் தன்னேரில்லாத தமிழாக வளரும். அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே: என்ற பழைய புலவர் கண்ட கனவு நிறைவேறும். எனவே ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்து சட்டத்துறையிலும் நீதித் துறையிலும் மருத்துவத் துறையிலும் ஆட்சி செய்தல் வேண்டும் கல்வித்துறையில் தமிழ் மக்களுக்குப் பயிற்றும் மொழியாகத் தமிழ் இருத்தல் வேண்டும். தாய்மொழி மூலமாகக் கல்வி கற்றால்தான் சிந்தனை அறிவு மிகுதியாகும். பிறமொழி மூலமாகக் கல்வி கற்றால் அறிவு வளரலாம். ஆனால் சிந்தனை வளர முடியாது. சிந்தனை வளராமல் புதிய கண்டு பிடிப்புகள் இல்லை. மேலை நாட்டாரைப் போல் தமிழர்களும் புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டுமானால் அவர்களுக்குச் சிந்தனைச் சக்தி-சிந்திக்கும் ஆற்றல் மிகுதல் வேண்டும். சிந்தனைச் சக்தியை மிகுவிக்கும் ஆற்றல் தாய்மொழிக்கே உண்டு. இத்தனை ஆண்டுக் காலமாக நான் கல்வித்துறையில் செய்த சேவையின் காரணமாக இன்றைக்கு என்ன அறிந்து கொண்டேன் என்றால் மாணவர்களுக்குச் சிந்தனா சக்தி பெரிய அளவில் பெருகவில்லை என்பதும், அதற்குக் காரணம் அந்நிய மொழி ஒன்றின் மூலம் கல்வி கற்று வந்து, அது அவர்களுக்குப் பெரும்பாரமாக இடையூறாக இருந்து வந்திருக்கிறது என்பதுதான்' என்று முன்னாள் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கூறுவதை இங்குச் சிந்தித்தல் வேண்டும். எனவே தமிழ் நாட்டில் பயிற்று மொழியாகத்