பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 215 தமிழ்தான் இருத்தல் வேண்டும். பாவேந்தர், தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய வேண்டும் என்கின்றார். அவ்வாறு ஒரு சட்டம் இல்லையென்றால் தமிழ்நாடு குன்றிவிடும் என்பதனை, தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும் இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும் -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 49. என்று காட்டுகின்றார். எனவே பயிற்று மொழியாகத் தமிழ் மொழி வேண்டும். பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஊராட்சி மன்றங்களிலும் கணக்காயர்கள் தமிழைப் போற்ற வேண்டும் என்கின்றார். அகவாழ்வில் தமிழ் இங்குதான் பாவேந்தர் புரட்சிக்க விளு"ராகக் காட்சி தருகின்றார், வணிகத்துறையில் தமிழ், இசைத்துறையில் தமிழ், படத்துறையில் தமிழ், செய்தித்தாளில் தமிழ், கோயிலில் தமிழ் என்று முழக்கம் செய்யும் பாவேந்தர் இல்லற வாழ்விலும் அகவாழ்விலும் தமிழ் வேண்டும் என் கின்றார். மற்றத்துறைகளில் தமிழ் வேண்டும் என்று யாரும் சொல்லலாம். யாரும் பாடலாம். ஆனால் அகவாழ்வில் கூடத் தமிழ்தான் வேண்டும் என்று பாவேந்தர் காட்டுவது அவரைப் புரட்சிக்கவி என்று எண்ணத் தோன்றுகின்றது. மாதொருத்தி வேண்டும் எனக்கும்-தமிழ் மகளா யிருந்தால்தான் இனிக்கும் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 75. என்றும்,