பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பொருள் விளங்கா மொழிபேசும் ஒருத்தி இருளில் இட்ட இன்ப ஓவியம் அழகும் பண்பும் தழையக் கிடப்பினும் பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு உயிரில்லாத உடலே அன்றோ கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன் வடிவிலா வாழ்வுக்கு அடிப்படை யன்றோ? -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 2, ப. 37. என்று வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கூடத்; தமிழுக்கு முதன்மை தருகின்றார். விவாக சுபமுகூர்த்தமென வெளிப்படுத்தும் மண அழைப்பில் மேன் மை என்ன? -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 31. என்று திருமண அழைப்பிதழில் வடமொழிக் கலப்பு இருத்தல் கூடாது என்று மறுக்கின்றார். மணமக்கள் தமைத் தமிழர் வாழ்க என வாழ்த்துமொரு வன்தமிழுக்கே இணையாகப் பார்ப்பான் சொல் வடமொழியா, தமிழர் செவிக்கு இன்பம் ஊட்டும் -பாரதிதாசன், தமிழியக்கம் , ப. 32. என்று மணமக்களை வாழ்த்துவதிலும் தமிழே வேண்டும். என்கின்றார். மணமக்கள் இல்லறத்தை மாத்தமிழால் தொடங்கிடுக மல்கும் இன்பம் -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 32. என்று இல்லறத் தொடக்கத்திலும் தமிழுக்கு முதன்மை தருகின்றார்.