பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 217 இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில், எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும் வழிந்தொழுகும் சுவைத் தமிழே பெருகவேண்டும் மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும் விழுந்த தமிழ்நாடு தலை தூக்க என்றன் உயிர்தனையே வேண்டிடினும் தருவேன் என்றான் பழம் இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள் பண்பாடும் வாய் திறப்பீர் அத்தான் என்றாள் -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பாகம் 1, ப. 32 என்று பள்ளி அறையில் கூடத் தமிழ்ச் சிந்தனையுடன் இருக்கும் குடும்பத் தலைவர்களைக் காட்டுகின்றார். செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழாம் கல்விக்கரசி கலைச்செல்வி ஒளவை இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க நினைந்து வந்தாள் என்னிலவள் தோனோ என்கிளியே? சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீ நிறுத்திப் பொற்கொடியே என்னருமைப் பொன்னே நீ கண்ணுறங்காய் -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பாகம் 3, ப. 31. என்று குழந்தையைத் தாலாட்டுப் பாடுவதிலும், அமிழ்தே அமிழ்தே ஓடிவா-என் அன்பின் விளைவே ஓடிவா தமிழின் சுவையே ஓடிவா-என் தங்கப் பாப்பா ஓடிவா -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பாகம் 3, ப. 38. என்று குழந்தை வளர்ப்பிலும் தமிழைப் போற்றிக் காணு கின்றார் பாவேந்தர். இவ்வாறு அகத்திலும் புறத்திலும் தமிழைப் போற்ற வேண்டும் என்று எடுத்துக்காட்டும் பாவேந்தர் அடுத்துப்பகை அழிப்பைக் கூறுகின்றார். பா-14