பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 புரட்சிக்க விஞர் பாவேந்தர் பாரதிதாசன் பகை அழிப்பு = தமிழ் உணர்ச்சியுடன் ஒருங்கிணைந்த தமிழர்க்கு எங்கெல்லாம் எவ்வாறு தமிழைப் போற்றவேண்டும் என்று கறிய பின்பு இக்காலத்தில் தமிழ் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகின்றது என்பதனையும், தமிழ்த்தாயின் அவலக்காட்சியையும் எடுத்துக் கூறிப் பகையழிப்பிற்கான உணர்ச்சியை ஊட்டுகின்றார். அதற்கு முதலில் தமிழின் அவல நிலையை - தமிழரின் சீர்கேட்டை எடுத்துக் கூறுகின்றார். வடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குக் கீர்த் தனங்கள் வடமொழியில் சுலோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம் வாய்க்கு வரா இந்துஸ்தான்! ஆபாச நடனம் அடையும் இவை அனைத்தையும் கழித்துப் பார்த்தால் அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம். டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 168. இவ்வாறு பிறமொழியெல்லாம் இங்கு வந்து ஆட்சி செய்ய, தமிழ் மொழி ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் படுகுழியை நோக்கித் தள்ளப்படுகின்றது. ஆனால் வடமொழிக்கும் பிறமொழிகளுக்கும் உற்றத் துணையாக இருந்து அவற்றை வளர்த்தது தமிழ் மொழி. கடல் சூழ்ந்த இவ்வுலகை எல்லாம் ஆட்சி செய்த மொழி. அத்தகைய பெருமை சான்ற மொழி ஒதுக்கப்படும்போது அம் மொழிக்கு உரிமை படைத்தவர்களான நாம் மறுமொழி கூறாமல் இருப்பது பேடித்தனம் அல்லவா? தமிழ் எழுத்துடன் வடமொழி எழுத்துகளைச் சேர்த்துத் தமிழ் எழுத்தை அழிக்கின்றார்கள். எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே ஆகும்; மொழியைக் கொல்வது என்பது இலக்கியத்தைக் கொல்வதற்குச் சமம், இலக்கியத்தைக் கொல்வது இனத்தைக் கொல்வது