பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 219 அல்லவா? தமிழ், தமிழினம், தமிழ் இலக்கியம் இவற்றுள் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்’ எனவே, இம் மூன்றையும் காத்தல் வேண்டும், அதற்குப் பிறமொழியைத் தமிழகத்தில் இருந்து ஒட்டவேண்டும். பிறன் கண்ணாலே பார்த்திட முடியுமா? பிறன் காதாலே கேட்டிட முடியுமா? பிறன் அறிவாலே உணர்ந்திட முடியுமா? பிறன் காலாலே நடந்திட முடியுமா? பிறமொழியாலே பேசலும் எழுதலும் அறவொளி காணலும் அரிது! பேதமை! இவைதாம் முடியும் என்றால், எவரும் தாய்மொழி விட்டுப் பிறமொழி தழுவலாம். -பாரதிதாசன் வேங்கையே எழுக, ப. 114. பிறன் பொருளால் எந்தப் பயனும் பெறமுடியாதபோது பிறன்மொழியால் மட்டும் என்ன பயன் விளைந்துவிடும். அப்படியே சிறிது பயன் விளையுமானால், அம்மொழியால் விளையும் கேடு பயனை விட அதிகமாக அல்லவா உள்ளது. எனவே, தெலுங்கு, தமிழ் காட்டினிலேன்? செத்த வடமொழிக்கிங்கே என்ன ஆக்கம்? -பாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 115, எங்கும் எதிலும் தமிழமுதுாட்டு இங்கிலீசை இந்தியை இடமிலா தோட்டு. -பாரதிதாசன், வேங்கையே எழுக ப. 115. இவற்றை ஒட்டுவதற்கு நீ தொண்டு செய், இல்லையெனில் உன்மொழி கெட்டுச் சீரழிந்துவிடும். தமிழுக்குநீ செய்யும் கேடு-பெற்ற தாய்க்குச் செய்யும் மானக்கேடு இமிழ்க்காதே சிந்தனைப் பீடு-நாளும் செழிக்கட்டும் தமிழ்மறைக்காடு. -பாரதிதாசன், தமிழுக்கு அமுதென்று பேர், ப. 132.