பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆனால், ஆட்சியாளர்கள் தமிழ் செழிக்க ஏதும் செய்யவில்லை. ஆனால் இந்திமொழி செழிக்கப் பல கோடிகள் செலவழிக்கின்றனர். நாமோ நமது நாட்டில் நம் தாய்மொழிக் கல்வியையே எல்லாருக்கும் அளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்திமொழியை மட்டும் அனைவரும் கற்க வேண்டுவது கட்டாயமாம் (இந்தி படிக்கவேண்டும் என்று சட்டம் வந்தபோது போடப்பட்டது.) இதை எண்ணிப் பாவேந்தர், தமிழ் அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில்-இந்தி ஆனைக்குத் தீனியும் கட்டாயமாம் சின்னப் பிள்ளைக்குத் தாய்ப்பாலில்லை-இந்தித் தீ நஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம் டபாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 92. என்று கொதித்தெழுகின்றார். .ெ கா தி த் தெ ழு ந் து இந்தியைத் தமிழ்நாட்டை விட்டு ஒழிக்கவேண்டும்; இதைத் தொண்டாகக் கருதி ஆற்ற வேண்டும். இத்தொண்டு தான் பகைவரை அஞ்ச வைக்கும், ஒடவைக்கும். மேலும், பொருள்களைத் தமிழினில் அழைப்பாய்-பிற பொருந்தாப் பெயர்களை ஒழிப்பாய் தெருப் பெயரில் தமிழே இழைப்பாய்-அதில் சிறுவார் மடமையை ஒழிப்பாய் என்று தெருப்பெயர்களிலும் தமிழே வேண்டும் என்கின்றார். இதை எதிர்ப்பவர் மடமையை ஒழி, எதிர்த்துப் போரிடு, உனக்கு எதிராக யாரும் வெற்றி பெற்றுவிட முடியாது. தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை. டபாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 130. எனவே எதிர்த்துப் போரிடு, தொண்டு செய் என்கின்றார்.