பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 221 தமிழ்க்காளைகாள் தமிழ் மாணவர்காள் தமிழின் பகையைக் காணுங்கள் தமிழ்ப் பகைமாய்த்த வீரர்கள் என்ற தன்மானத்தைப் பூணுங்கள் -பாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 142. என்று மாணவர்களை நோக்கி அறைகூவல் விடுக்கின்றார்; போரில் பகையை மாய்க்காமல் மாய்ந்துவிட்டால் புகழ் நிலைத்து நிற்கும்; எனவே மொழிப் போரையே தொண்டாகக் கருதிச் செய்யுங்கள். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 81. இல்லை. எனவே போராடிப் போராடியே நாம் தமிழை மீட்க வேண்டும் என்கின்றார். இவ்வாறு பாவேந்தரின் தமிழியக்கம் மக்களுக்கு மொழி உணர்ச்சி ஊட்டி, அதன் மூலம் ஒன்றுபடச் செய்து, :தமிழ் இயக்கத்தை"க் குடும்பம் தழுவிய இயக்கமாக மாற்றித் தமிழைப் போற்றிப் பகையை அழிப்பதற்கான வழிமுறையை கூறி, வெற்றிக்கனியை எவ்வாறு எய்தவேண்டும் என்பதனையும் படிப்படியாகக் கூறுகின்றது. இவரது தமிழ் இயக்கம். எந்த ஒருபடிநிலையிலும் பிழை என்பது இல்லாமல் ஒரு சிறந்த இயக்கத்திற்கான கொள்கைகள், வரன் முறைகள் யாவும் செம்மையாய் அமையப் பெற்றதாக விளங்குகின்றது. பாவேந்தரின் மொழிச்சிந்தனை வடமொழிக் குதவி தமிழ்மொழி யன்றோ! மறுமொழி கூறாது இருப்பது நன்றோ? கடல்சூழ் வையம் ஆண்டது தமிழோ! கையேந்தி வந்தவர் பேசிய மொழியோ? -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 2, ப. 30.