பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222. புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். எனவே தமிழ் மொழியை, தமிழ்த் தாயை முன்னைப் போலத் தன்னைத் தானே ஆளவகை செய்யவேண்டும். அதற்கு ஒர் உறுதி எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். மதிலை முற்றுகை இட்டிருக்கும் மன்னன், அம்மதிலைக் கடந்து வெற்றி வாகை சூடத்திட்டமிடுகின்றான். மதிலை வெற்றிகொண்டே ஆகவேண்டும். அதற்கு அவர்கள், தாங்கள் சமைத்து உண்ணும் பாத்திரங்களான அகப்பை, தட்டு, உண்கலம் முதலியவற்றை அம்மதிலுக்கு உட்புறத் தில் துரக்கி எறிகின்றனர். அதாவது அடுத்த வேளை உணவு மதிலின் உட்புறத்தில் இருக்கவேண்டும் என்பது அவர்கள் எண்ணம். இத்தகைய காட்சி ஒன்றினைச் சங்கப்பாடல் ஒன்று உணர்த்துகின்றது. அதைப் போலவே தமிழ்ப் பகை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் ஆணையிடுதல் வேண்டும் என்று கருதும் பாவேந்தர் அவ்வாணையைக் கூறுகின்றார்: தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழக மேல் ஆணை தூய என் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன் தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய்தடுத் தாலும் விடேன் எமை நந்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன் -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 1. ப. 41. என்று ஆணையிடச் செய்கின்றார். அதுவும் எத்தகைய ஆணை: தாயைப் பழித்தவனை நாம் யார் தடுத்தாலும் விடமாட்டோம். ஆனால் பாவேந்தர் கூறுகின்றார் தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே என்று! அதாவது தாயைப் பழித்தவனை ш гг гі தடுத்தாலும் விடாதே. தமிழைத் பழித்தவனைப் தாய்