பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 223 தடுத்தாலும் விடாதே என்பது அவர் ஆணையாக இருந்தது எனலாம். l பகைவன் யார் மொழிப் போருக்கு ஆயத்தமாகிவிட்ட பிறகு யாரை அழிப்பது, எதை அழிப்பது என்று தெரிய வேண்டாமா? நமது LI &J) 55 எது என்று தெரிந்துகொள்ளாமல் அணிவகுத்து என்ன பயன்? குறிக்கோள் முழுமை பெறா அணிவகுப்பாகி விடுமே. பாவேந்தர் மொழிப் போரின் ஒவ்வோர் அசைவிலும் குறிக்கோளை வேண்டுபவர். எனவே நமது பகை எது என்பதையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றார். முட்டாள்கள் நமது முதற் பகைவர்கள். யார் முட்டாள்? யார் அறிவிலி: கல்வி அறிவு அற்றவனா? உணர்ச்சி அற்றவனா? சிந்தனா சக்தி இல்லாதவனா? இல்லை! இல்லை! இவர்கள் எல்லாம் மொழிப் போரில் முட்டாள்கள் இல்லை. அப்படியானால் யார் முட்டாள்கள்? நகும்படியோர் தமிழறிஞன் தமிழர்க் கின்னல் நாடுவனேல், அவ்வறிஞன் முட்டாள் ஆவான் இகழ்மிக்க ஒரு முட்டாள் தமிழர்க் கின்னல் எண்ணானேல் அம்முட்டாள் அறிஞனாவான். -பாரதிதாசன், குறிஞ்சித்திட்டு, ப. 206. தமிழ் மீட்புப் போரில் தமிழர்க்கு இன்னல் விளைவிக்கும் அறிஞனும் முட்டாள் ஆகின்றான். தமிழருக்கு இன்னல் எண்ணாத முட்டாளும் அறிஞனாகின்றான். எனவே தமிழருக்கு இன்னல் எண்ணாத ஒருவன் அவன் முட்டாளாக இருந்தாலும் நமது நண்பன். தமிழருக்கு இன்னல் விளைவிக்கும் ஒருவன், அவன் எவ்வளவுதான் அறிவு பெற்றவனாக இருந்தாலும் நமது பகைவனே. ஒருவன் நல்ல தமிழ் அறிவு பெற்றவனாக. தமிழ் இலக்கியத் திலும், இலக்கணத்திலும் நுண்மாண் நுழைபுலம் பெற்ற