பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வனாக இருந்தாலும் அவன் சிந்தனை தமிழுக்கு வஞ்சனை செய்வதாக இருப்பதால் அவனே நமது முதற் பகைவன்: உட்பகை என்று கூடச் சொல்லலாம். தொண்டர்களிடம் தமிழ் உணர்ச்சியும், தமிழை மீட்க வேண்டும் என்ற வீர உணர்ச்சியும் இருந்து தலைவனிடம் அவ்வுணர்வுகள் இல்லையென்றால் அவர்களால் எதைத் தான் செய்யமுடியும்? தகுதியில்லா மீகாமனைப் பெற்ற கலமாக அல்லவா அவர்கள் தவிப்பர். எனவே மொழிப் போருக்குத் தலைவர்கள் தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். இத்தகைய தலைவருடன் மொழிப்போர் நடத்தி வெற்றி பெறவேண்டும்.

  • * * * * * இளைஞர்களே

தென்னாட்டுச் சிங்கங்காள்! எழுக, நம் தாய் மொழிப்போரே வேண்டுவது தொடக்கம் செய்வீர் வெல்வீர் மொழிப்போர் வெல்க. -பாரதிதாசன், தமிழியக்கம், ப. 52. என்று கூறி, துயர் செய்ய எண்ணிடும் பகைவர்-திறம் தூள் என்று கொட்டு முரசே -பாரதிதாசன், இசையமுது, தொகுதி 1, ப. 57. என்று வெற்றி முரசு கொட்டி வழியனுப்பி வைக்கின்றார். அடுத்துப் பே: ரில் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைக் கூறுகின்றார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று மார்தட்டும் பாவேந்தர் தமிழர்கள் பிற மொழிகளைக் கற்கவே கூடாது என்று கூறவில்லை.