பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 புரட்சிக்க விஞர் பாவேந்தர் பாரதிதாசன் தரவேண்டுமா? அல்லது ஆங்கிலம் எழுதப் படிக்கத், தெரிந்தாலே போதுமா? எனக் கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கு விடை, தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்க! ஆங்கில நூல் அறிவுக்குச் சான் றிருந்தால் அது போதும் அலுவல் பார்க்க! - பாரதிதாசன், தமிழியக்கம், ப. 20. என்கின் மார் பாவேந்தர். பிறமொழி அறிவு அலுவல் பார்க்கும் அளவிற்கு இருந்தால் போதும் என்கின்றார். இத்துடன் பாவேந்தரின் மொழிச் சிந்தனை நின்றுவிட வில்லை. அனைத்து மக்களுக்கும் அலுவல் பார்க்கும் அளவில் மட்டுமே, பிறமொழி அறிவு இருத்தல் போதாது ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுக்குப் பிறமொழியில் ஆழமான மொழி அறிவு வேண்டும். எதற்கு? வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்திடவும் வேண்டும். - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 95. அதாவது மொழிபெயர்ப்புக்குப் பிறமொழி அறிவு மிகவும் முக்கியம். பிறமொழியில் இருப்பதை எல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தல் வேண்டும். அப்பொழுதுதான் செந்தமிழ் செழுந்தமிழாக மாறும். வெறும் பழம்பெருமை களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எங்கள்தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைங்தோ மில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 95.