பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 21 மக்கள் மருமக்கள் பேரர் கொள்ளுப் பேரர் ரமணி சிவசுப்பிர செங்குட்டுவன் மணியம் வீரமணி மணிமேகலை முல்லைக்கொடி சுப்புரத்தினம் (பெண்) மணியரசு பாவேந்தரின் பெற்றோர் ; கனகசபை - இலக்குமி சகோதரர் : சுப்பராயன் சகோதரிகள் ; சிவகாமசுந்தரி, இராசாம்பாள் பொற்கிழி பெற்றார் புரட்சிக்கவிஞர் நான்கு மக்களைப் பெற்ற பாவேந்தர் அவர்களை வறுமை விட்டு வைக்கவில்லை. அவருக்கு ஆசிரியப் பணியில் ஊதியம் கிடைத்தாலும் அவரது தாளாண். மைக்கும் செலவினங்களுக்கும் அது போதவில்லை. புரட்சிக்கவிஞருக்குப் பணமுடிப்பு அளிப்பதென்று: அவரது நண்பர்கள் முடிவு செய்து நல்லபாளையம் திரு. என். கிருஷ்ணராசு அவர்கள் தலைமையில் நிதிக்குழு நிறுவப்பட்டு ரூபாய் ஏழாயிரம் வரை நிதி சேர்த்தனர். பெரியார் அவர்கள் இந்நிதிக்கு நூறு ரூபாய் அளித்தார். பின்னர்ச் சென்னையில் இந்நிதிக்குழு விரிவுபடுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் பொருளாளரா கத். தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய நிதிக் குழுவின் முயற்சியால் ரூபாய் 25,000 சேர்க்கப்பட்டது. 28.7.46-ல் நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் திடலில் பேரறிஞர் அண்ணா ரூபாய் 25,000 கொண்ட பணமுடிப்பைப் புரட்சிக்.