பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கருப்பொருளில் யாழையும் சேர்த்திருப்பது இதனை வலியுறுத்தும். சங்க காலத்தில் இசைத்துறை வளமாக வளர்ந்திருந்தது என்பதனைப் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற நூல்களினால் நன்கு அறியலாம். இசையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த குடி பாணக்குடி என்று வழங்கப்பட்டது. பாணன், பாடினி போன்ற சொற்கள் இக்குல ஆண் பெண்களை முறையே உணர்த்துவன. மேலும் பரிபாடலில் Ι / Gl) இசைக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்தும் தமிழ் இசை நன்கு போற்றப் பட்டமையைச் சிலப்பதிகாரத்தால் அறியலாம். அரங் கேற்றுக் காதை இசைத் தமிழுக்கு இலக்கணம் கூறுகின்றது. இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாக கானல்வரி வேட்டுவ வகி குன்றக்குரவை ஆய்ச்சியர் குரவை போன்றன திகழ்கின்றன. இடைக்காலத்தில் தமிழிசை தழைத்து வளர்ந்தது. தாழிசை, துறை, விருத்தங்கள் தோன்றலாயின. திருத்தக்க தேவர் சந்த விருத்தம் பாடித் தமிழிசையை வளர்த்தார். இவரை அடியொற்றிக் கம்பரும், சேக்கிழாரும் தமிழிசைக்கு வலுவூட்டினர். இவ்வனைத்திற்கும் மேலாகச் சமய குரவர்கள் அருளிச் செய்த தேவாரத்தில் தமிழிசையின் முழு மலர்ச்சியினைக் காண்கிறோம். நாளும் இன்னிசை பால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர், தாண்டக வேந்தராம் திருநாவுக்கரசர், தம் பிரான் தோழராம் சுந்தரமூர்த்திகள் ஆகியோர் கழகமொடமர்ந்த கண்ணுதற் கடவுளை இன்னிசையால் பாடிப் பரவினர் .9 ஆழ்வார்களும் பாசுரங் களால் தமிழிசையைப் போற்றிக் காத்தனர். இக்காலத்தில் .ெ ப. ரு ந ா ைர, பெருங்கு குகு, தாளசமுத்திரம், இசை துணுக்கம், தாள வகை ஒத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக்